Saturday, March 13, 2010

ரங்கவிலாஸ் மில் திட்டச்சாலை ரூ.75 லட்சத்தில் சீரமைப்பு

கோவை,​​ மார்ச் 11:
அவிநாசி சாலை}திருச்சி சாலையை இணைக்கும் ரங்கவிலாஸ் மில் திட்டச் சாலை ரூ.75 லட்சத்தில் சீரமைக்கும் பணி புதன்கிழமை துவக்கப்பட்டது.

​ உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி கோவை மாநகராட்சியில் உள்ள முக்கிய சாலைகள்,​​ திட்டச் சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன.​ அதன் ஒரு பகுதியாக ரங்கவிலாஸ் மில் திட்டச் சாலையும் சீரமைக்கப்படுகிறது.

​ இந்த திட்டச் சாலையில் ஜி.வி.ரெசிடென்ஸி குடியிருப்பு பகுதியில் ரூ.75 லட்சத்தில் பாலம் மற்றும் தடுப்புச்சுவர் கட்டும் பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.​ இந்நிகழ்ச்சியை கோவை மேயர் ஆர்.வெங்கடாசலம் துவக்கி வைத்தார்.​ துணை மேயர் நா.கார்த்திக் தலைமை வகித்தார்.​ கிழக்கு மண்டல தலைவர் எஸ்.எம்.சாமி முன்னிலை வகித்தார்.

​ ​ இது குறித்து துணை மேயர் கார்த்திக் கூறியது:​ ரங்கவிலாஸ் மில் திட்டச் சாலை சீரமைக்கப்பட்டால் சிங்காநல்லூர்,​​ ஒண்டிப்புதூர்,​​ உப்பிளிபாளையம்,​​ வரதாராஜபுரம் உள்ளிட்ட பகுதியில் இருந்து அவிநாசி சாலைக்கு எளிதில் செல்ல முடியும்.​ அதேபோல பீளமேடு மற்றும் அவிநாசி சாலையில் இருந்து திருச்சி சாலைக்கு செல்வோர் எளிதாக செல்ல முடியும்.

÷பீளமேடு,​​ மசக்காளிபாளையம்,​​ லெட்சுமிநகர்,​​ உப்பிலிபாளையம்,​​ சவுரிபாளையம் கிழக்கு பகுதி,​​ ராஜுவ்காந்தி நகர்,​​ கோஆபரேட்டிவ் காலனி ஆகிய பகுதி மக்களின் 30 ஆண்டு கோரிக்கை இப்போது தான் நிறைவேறுகிறது என்றார்.

÷மாநகராட்சி செயற்பொறியாளர் சுகுமார்,​​ கவுன்சிலர்கள் தன்ராஜ்,​​ சேரலாதன் உள்பட பலர் பங்கேற்றனர்.


Source: www.skyscrapercity.com

No comments: