Tuesday, August 3, 2010

அஜித்தின் பில்லா பார்ட் 2 : விரைவில் அறிவிப்பு!!



2007ம் ஆண்டு வெளியான பில்லா படம் சக்கை போடு போட்டு வசூலை வாரி குவித்தது. டைரக்டர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ‌வெளியான அந்த படத்தில் அஜித் ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். நமீதாவும் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். நயன் - நமீதா இருவரும் போட்டி ‌போட்டு கவர்ச்சி காட்டினார்கள். நயன்தாரா அதுவரை இல்லாத அளவுக்கு டூ- பீஸ் உடையணிந்து நடித்திருந்தார். இதுவும் படத்தின் வெற்றிக்கு உதவியது. பில்லாவைத் தொடர்ந்து அஜித், ஏகன், அசல் படங்களில் நடித்தார். விஷ்ணுவர்தன் சர்வம் படத்தை இயக்கினார். இவர்களது படங்கள் எதுவும் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.

No comments: