Tuesday, August 3, 2010

எந்திரன் ரிலீஸ்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

எந்திரன் நம்பர் 2

Rajinikanth and Aishwarya Rai
ஜினி நடிக்க, ஷங்கர் இயக்கியுள்ள எந்திரன் திரைப்படம் [^] அடுத்த மாதம் வெளியாகும் என்று சன் பிக்ஸர்ஸ் அறிவித்துள்ளது.

இதன்படி செப்டம்பர் முதல் வாரத்தில் இந்தப் படம் மூன்று மொழிகளில் உலகமெங்கும் வெளியாகிறது.

எந்திரன் பாடல்கள் பெரும் வெற்றியடைந்துள்ளன. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகும் ரஜினி [^] படம் என்பதால் ரசிகர்கள் [^] பெரும் எதிர்ப்பார்ப்புடன் இந்தப் படத்துக்காக காத்திருக்கிறார்கள்.

ஆடியோவையும் பெரும் வெற்றியடையச் செய்துள்ளனர். வெளியான இரண்டே நாட்களில் மீண்டும் பல லட்சம் ஆடியோ சிடிக்களை தயார் செய்துள்ளது திங்க் மியூசிக் நிறுவனம்.

'எங்கள் அனுபவத்தில் இப்படி ஒரு விற்பனையைப் பார்த்ததில்லை', என்கிறார் திங்க் மியூசிக் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர்.

இந்நிலையில் படத்தின் வெளியீடு எப்போது என பெரும் ஆர்வத்துடன் கேட்டு வந்தனர் ரசிகர்கள். எந்திரன் இசை வெளியீட்டு மேடையில் அடுத்த மாதம் ரிலீஸ் என்று கூறினார் சன் பிக்ஸர்ஸ் சிஇஓ ஹன்ஸ்ராஜ் சக்ஸேனா. ஆனால் அதை அவர் சொன்ன தேதி ஜூலை 31. எனவே ஆகஸ்டா, செப்டம்பரா என்ற குழப்பம் இருந்தது. இப்போது செப்டம்பர் முதல் வாரத்தில் எந்திரன் ரிலீஸ் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

No comments: