Tuesday, August 3, 2010

இனி வருஷத்துக்கு மூணு படம்! அஜித் அதிரடி முடிவு!!



இனி வருஷத்துக்கு 3 படத்தில் நடிக்க நடிகர் அஜித் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இளம் முன்னணி நடிகர் விஜய் வருஷத்துக்கு மூன்று அல்லது நான்கு படங்கள் என நடித்து வருகிறார். இதன் மூலம் அவரது ரசிகர்களுக்கு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கொண்டாட்டம்தான். ஆனால் அஜித்தோ... ஆண்டுக்கு ஒரு படம் நடிப்பதே அபூர்வமாகி விட்டது. இதனால் அஜித் ரசிகர்கள் வருத்தப்படுவது என்னவோ உண்மைதான். நம்ம தலயும் வருஷத்துக்கு ரெண்டு படமாவது நடிக்க மாட்டாரா? என அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள். ரசிகர்களில் இந்த எதிர்பார்ப்பு தலயின் காதுகளுக்கு எட்டி விட்டதோ என்னவோ... இனி வருஷத்துக்கு மூன்று படங்களில் நடிக்கும் முடிவை அதிரடியாக எடுத்து விட்டாராம். அடுத்து ஒரு ஆண்டுக்குள் நடித்து முடிக்க மூன்று பட ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவரது முந்தைய முடிவுகளில் எந்த மாற்றமும் இல்லை என்கிறது அஜித் வட்டாரம். முன்பு கதை கேட்டு ஒப்புக் கொண்டபடியே வெங்கட் பிரபு, கவுதம் மேனன், கிரீடம் விஜய் ஆகிய மூவரது படங்களையும் வரிசையாக நடித்துக் கொடுக்கப் போகிறாராம். இதில் வெங்கட் பிரபு, கவுதம் மேனன் படங்களை க்ளவுட் நைன் நிறுவனம் தயாரிக்கிறது. விஜய் இயக்குகிற படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கப் போகிறது. இனி தல ரசிகர்களின் காட்டில் சந்தோஷ மழைதான்!

No comments: